ADDED : மார் 15, 2026 03:36 AM
அ நிறம் | அளவு
திருக்கோவிலுார்: மார்ச் 15-: திருக்கோவிலுார் அருகே வெளிமாநில தொழிலாளியை தாக்கியவரை போலீசார் கைது செய்தனர்.
உத்தரபிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்தவர் நெத்துகான் மகன் முகமது அசின்கான், 35; திருக்கோவிலுார், சந்தப்பேட்டை, சங்கராபுரம் சாலையில் தங்கி, ஐஸ் வியாபாரம் செய்து வருகிறார்.
நேற்று முன்தினம் மணலுார்பேட்டையில் ஐஸ் விற்றபோது, மணலுார்பேட்டை, மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த பெருமாள் மகன் சிங்காரவேல், 38; ஐஸ் வாங்கியபோது, வாய் தகராறு ஏற்பட்டது.ஆத்திரமடைந்த சிங்காரவேல் முகமது அசின்கானை தாக்கியதில் காயமடைந்தார். முகமது அசின்கான் திருக்கோவிலுார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.
இது குறித்து முகமது அசின் கான் கொடுத்த புகாரின் பேரில் மணலுார்பேட்டை போலீசார் வழக்குப்பதிந்து சிங்காரவேலுவை கைது செய்தனர் .
