/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
உறவினர் மீது தாக்குதல் ஒருவர் கைது
/
உறவினர் மீது தாக்குதல் ஒருவர் கைது
ADDED : மே 21, 2025 11:46 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருக்கோவிலுார்: அரகண்டநல்லூர் அடுத்த வீரபாண்டி கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தன் மகன் பழனிவேல், 39; இவரது உறவினர் ராமலிங்கம் மகன் மணிகண்டன், 35; இந்த இருவருக்கும் நில பிரச்னையில் முன் விரோதம் உள்ளது.
இந்நிலையில் நேற்று முன்தினம், மணிகண்டன் தடியால் தாக்கியதில் பழனிவேல் பலத்த காயம் அடைந்தார்.
தொடர்ந்து அவர் திருக்கோவிலுார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது குறித்த புகாரின் பேரில் அரகண்டநல்லூர் போலீசார் வழக்கு பதிந்து மணிகண்டனை கைது செய்தனர்.