ADDED : செப் 10, 2025 11:15 PM
சங்கராபுரம்:சங்கராபுரம் அருகே திருநங்கையை தாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
சங்கராபுரம் அடுத்த ஊராங்கனி கிராமத்தை சேர்ந்தவர் காசிநாதன். இவருக்கும் பக்கத்து வீட்டில் வசிக்கும் வேலு என்பவருக்கும் வீட்டு மனை சம்மந்தமாக முன்விரோதம் இருந்தது. கடந்த 8ம் தேதி திருநங்கை சத்யா, தனது சகோதரியான காசிநாதன் மனைவி சத்யா வீட்டிற்கு சென்றார்.
அங்கு வந்த வேலு, அவரது மனைவி அய்யம்மாள், மகன்கள் முரளி, சுமன் ஆகியோர் முன்விரோதம் காரணமாக திருநங்கை ஜெயா, அவரது சகோதரி சத்யா ஆகியோரை திட்டி தாக்கினர். இது குறித்து சங்கராபுரம் போலீசில் புகார் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்காததை கண்டித்து நேற்று முன்தினம் 50க்கும் மேற்பட்ட திருநங்கைகள் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்நிலையில், திருநங்கையை தாக்கிய வேலு மகன் சுமன், 25; என்பவரை சங்கராபுரம் போலீசார் நேற்று கைது செய்தனர்.