ADDED : டிச 27, 2024 07:09 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அருகே தகராறில் இரு பெண்களை தாக்கியவரை போலீசார் கைது செய்தனர்.
கள்ளக்குறிச்சி அடுத்த பெருவங்கூர் காலனி சேர்ந்த குள்ளன் மனைவி காந்தி,50; இவரது வீட்டின் முன்பு பக்கத்து வீட்டை சேர்ந்த பாலன்,56; மழை தண்ணீர் செல்லும் வாய்க்காலை மறித்து மண்கொட்டி அடைத்துள்ளார்.
இதனால், மழை நீர் வடியாமல் அங்கேயே தேங்கி நின்றுள்ளது. இது குறித்து கேட்டதால் இரு குடும்பத்தினரிடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இதில் ஆத்திரமடைந்த பாலன் அவரது மனைவி ஜானகி,45; ஆகியோர் சேர்ந்து காந்தி, அவரது மருமகள் சுகன்யா ஆகியோரை திட்டி தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
இது குறித்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் பாலன், ஜானகி ஆகியோர் மீது வழக்கு பதிந்து பாலனை கைது செய்தனர்.