/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
சிறுமியை பலாத்காரம் செய்ய முயன்ற நபர் கைது
/
சிறுமியை பலாத்காரம் செய்ய முயன்ற நபர் கைது
ADDED : அக் 26, 2025 11:02 PM

திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் அருகே சிறுமியை பலாத்காரம் செய்ய முயன்றவரை போலீசார் கைது செய்தனர்.
திருக்கோவிலுார் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த 7 ஆம் வகுப்பு படிக்கும் 13 வயது சிறுமி. நேற்று முன்தினம் இயற்கை உபாதை கழிக்க வெளியில் சென்றார்.
வடக்குநெமிலி, கலர்புரத்தைச் சேர்ந்த வெங்கடேசன், 54; சிறுமியை பின் தொடர்ந்து சென்று பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றார்.
பதறிப்போன சிறுமி வெங்கடேசன் பிடியிலிருந்து தப்பி சென்று நடந்த சம்பவம் குறித்து பெற்றோரிடம் கூறினார்.
இது குறித்த புகாரின் பேரில் திருக்கோவிலுார் போலீசார் போக்சோ பிரிவின் கீழ் வழக்குப் பதிந்து வெங்கடேசனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

