/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
பெண்ணை மானபங்கம் செய்ய முயன்றவர் கைது
/
பெண்ணை மானபங்கம் செய்ய முயன்றவர் கைது
ADDED : ஏப் 28, 2025 10:11 PM

சங்கராபுரம்::
சங்கராபுரம் அருகே கத்தியைக் காட்டி மிரட்டி இளம்பெண்ணை மானபங்கம் செய்ய முயன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
சங்கராபுரம் அடுத்த அரியலுார், காட்டுகொட்டாயைச் சேர்ந்தவர் அந்தோணி நெல்சன் மனைவி ஜோஸ்பின் மரியாள், 24; இவர், நேற்று தனது கணவருடன் பைக்கில் விரியூரில் உள்ள தாய் வீட்டிற்கு சென்றுவிட்டு மீண்டும் அரியலுாருக்கு சென்று கொண்டிருந்தார்.
விரியூர் காப்புக்காட்டில் மையனுார் கிராமத்தைச் சேர்ந்த சின்னப்பராஜ் மகன் நெல்சன் ஏசுராஜ் என்பவர்  பைக்கை வழிமறித்து கத்தியைக் காட்டி மிரட்டி, ஜோஸ்பின் மரியாள் கையை பிடித்து இழுத்து மானபங்கம் செய்ய முயன்றார். அவரிடமிருந்து தப்பிய இருவரும் இது குறித்து சங்கராபுரம் போலீசில் புகார் அளித்தனர். அதன் பேரில் போலீசார் வழக்குப் பதிந்து நெல்சன் ஏசுராஜை கைது செய்தனர்.

