ADDED : ஆக 06, 2025 12:41 AM
கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சியில் பெண்ணிடம் நெருக்கமாக உள்ள வீடியோவை வெளியிடாமல் இருக்க பணம், வீட்டுமனை கேட்டு மிரட்டிய நபரை போலீசார் கைது செய்தனர்.
கள்ளக்குறிச்சியை சேர்ந்தவர் அஸ்லாம்பாஷா மகன் பைசல்பாஷா, 27; என்பவரை கடந்த மே மாதம் 26ம் தேதி வாட்ஸ் ஆப் மூலம் மர்ம நபர் தொடர்பு கொண்டார்.
அதில் பைசல் பாஷா பெண்ணிடம் நெருக்கமாக இருக்கும் வீடியோ உள்ளதாகவும், அதை சமூக வலைதளங்களில் வெளியிடாமல் இருக்க பணம் மற்றும் வீட்டு மனை தர வேண்டும் என மிரட்டினார். மேலும், இது குறித்து வெளியில் கூறினால் கொலை செய்து விடுவேன் என மிரட்டல் விடுத்தார்.
இது குறித்து கள்ளக்குறிச்சி போலீசில் பைசல்பாஷா புகார் அளித்தார். போலீஸ் விசாரணையில், பைசல்பாஷாவை மிரட்டியது கள்ளக்குறிச்சியை சேர்ந்த சுலைமான் மகன் அபுபக்கர் சித்திக், 35; என தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, போலீசார் அபுபக்கர் சித்திக்கை கைது செய்தனர்.