/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
சிறுமியை திருமணம் செய்த வாலிபர் போக்சோவில் கைது
/
சிறுமியை திருமணம் செய்த வாலிபர் போக்சோவில் கைது
ADDED : ஏப் 11, 2025 06:24 AM
உளுந்துார்பேட்டை: உளுந்துார்பேட்டை அருகே, 17 வயது சிறுமியை திருமணம் செய்த வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணைநல்லுார் தாலுகா, சமுத்திரபாளையத்தை சேர்ந்தவர் பாவாடைராயன் மகன் பிரபாகரன், 30; இவர் உளுந்துார்பேட்டை தாலுகா, எறையூரை சேர்ந்த 17 வயது சிறுமியை கடந்தாண்டு, மே மாதம் திருமணம் செய்தார். மூன்று மாத கர்ப்பிணியாக இருந்த போது கருத்து வேறுபாடு காரணமாக, சிறுமி தன்னுடைய தாய் வீட்டிற்கு வந்து விட்டார்.
இந்நிலையில் பிரபாகரன் சிறுமியை தன்னுடன் வாழ அமைத்தார். அதற்கு சிறுமி மறுத்த நிலையில் அவருக்கு கொலை மிரட்டல் விடுத்தார். சிறுமி புகாரின் பேரில் உளுந்துார்பேட்டை அனைத்து மகளிர் போலீசார் அவரை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

