/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்தவர் கைது
/
போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்தவர் கைது
ADDED : மே 16, 2025 02:38 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மூங்கில்துறைப்பட்டு: மூங்கில்துறைப்பட்டு அருகே போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்தவர் கைது செய்யப்பட்டார்.
மூங்கில்துறைப்பட்டு அடுத்த மைக்கேல்புரம், புனித மைக்கேல் அதிதுாதர் ஆலயத்தில் நேற்று தேர் திருவிழா நடந்தது.
அப்போது அதே கிராமத்தை சேர்ந்த சின்னப்பன் மகன் ஜான் பேப் டிஸ்ட், 35; என்பவர் தேருக்கு முன், நண்பர்களுடன் ஆடிக் கொண்டிருந்தார். மேலும் அவர் பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸ் ஏட்டு சண்முகத்தை, திட்டி அவரை பணி செய்ய விடாமல் தடுத்தார். தொடர்ந்து, வட பொன்பரப்பி போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்தனர்.