/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
மதுபாட்டில் கடத்திய நபர் கைது : கார் பறிமுதல்
/
மதுபாட்டில் கடத்திய நபர் கைது : கார் பறிமுதல்
ADDED : ஆக 09, 2025 11:28 PM

கள்ளக்குறிச்சி: புதுஉச்சிமேட்டில் காரில் மதுபாட்டில் கடத்தி வந்த நபரை போலீசார் கைது செய்தனர்.
கள்ளக்குறிச்சி அடுத்த புதுஉச்சிமேடு பகுதியில் புதுச்சேரி மாநில மதுபாட்டில்கள் விற்பனை செய்யப்படுவதாக வரஞ்சரம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், சப் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் புதுஉச்சிமேடு கிராமத்தில் சோதனை மேற்கொண்டனர். அதே கிராமத்தைச் சேர்ந்த மாயவேல் மகன் ராஜ்கு மார்,35; என்பவர் டி.என்.45. சிசி. 4181 என்ற பதிவெண் கொண்ட மாருதி ஸ்விப்ட் காரில், காரைக்காலில் இருந்து புதுச்சேரி மாநில மதுபாட்டில்கள் கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து ராஜ்குமாரை கைது செய்து, அவரிடமிருந்த 96 மதுபாட்டில்கள் மற்றும் கார் பறிமுதல் செய்யப்பட்டது.