ADDED : ஜன 24, 2025 06:31 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ரிஷிவந்தியம்: வாணாபுரம் அடுத்த அத்தியூர் கிராமத்தை சேர்ந்தவர் முருகன் மனைவி மங்கவர்த்தா,35; இவர், நேற்று முன்தினம் மதியம் 1 மணியளவில் அத்தியூர் சந்தைமேட்டில் நின்றிருந்தார்.
அப்போது அவ்வழியாக பைக்கில் வந்த மர்மநபர் ஒருவர் மங்கவர்த்தாவின் பர்ஸினை திருடிக்கொண்டு தப்பினார். உடன், அங்கிருந்தவர்கள் பைக்கில் சென்ற மர்மநபரை துரத்தி பிடித்து, போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
விசாரணையில் மர்மநபர் பாக்கம் கிராமத்தை சேர்ந்த அண்ணாதுரை மகன் அன்பு,26; என்பது தெரிந்தது. இது குறித்து முருகன் அளித்த புகாரின் பேரில், அன்புவை கைது செய்து, அவரிடமிருந்த பர்ஸ், செல்போன் மற்றும் பைக் ஆகியவற்றை பகண்டைகூட்ரோடு போலீசார் பறிமுதல் செய்தனர்.

