தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ மொபைல்போன் திருடிய நபர் கைது

 மொபைல்போன் திருடிய நபர் கைது

 மொபைல்போன் திருடிய நபர் கைது


ADDED : ஏப் 19, 2026 10:46 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 19, 2026 10:46 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அரசு மகப்பேறு மருத்துவமனையில் துாங்கி கொண்டிருந்தவரின் மொபைல்போன் திருடிய நபரை போலீசார் கைது செய்தனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், ஆற்கவாடி கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் லோகநாதன்,27; இவரது மனைவி செல்விக்கு கள்ளக்குறிச்சி அரசு மகப்பேறு மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்தது. லோகநாதன் மருத்துவமனையில் மனைவியுடன் இருந்து குழந்தையை கவனித்து வந்தார். கடந்த 18ம் தேதி மருத்துவமனை வளாகத்தில் உள்ள விநாயகர் கோவில் அருகே லோகநாதன் துாங்கி கொண்டிருந்தார்.

அப்போது, மர்ம நபர் லோகநாதனின் சட்டை பாக்கெட்டில் இருந்த மொபைல்போனை திருடினார். திடுக்கிட்டு எழுந்த லோகநாதன் மற்றும் அருகிலிருந்தவர்கள் மொபைல்போன் திருடிய நபரை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில், கள்ளக்குறிச்சி அடுத்த சுந்தரேசபுரத்தை சேர்ந்த அய்யனார் மகன் சிலம்பரசன், 27; என்பது தெரிந்தது. இதையடுத்து கள்ளக்குறிச்சி போலீசார் சிலம்பரசனை கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us