/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
பள்ளி மாணவிகளிடம் சில்மிஷம் செய்தவர் சிக்கினார்
/
பள்ளி மாணவிகளிடம் சில்மிஷம் செய்தவர் சிக்கினார்
ADDED : பிப் 06, 2025 07:15 AM
உளுந்தூர்பேட்டை; உளுந்தூர்பேட்டையில் நடந்து சென்ற பள்ளி மாணவிகளிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட நபரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்துார்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்து வரும் மாணவிகள் பள்ளி முடிந்து நேற்று மாலை 5.00 மணி அளவில் வீட்டிற்கு புறப்பட்டனர்.
அதில் இரு மாணவிகள் உளுந்துார்பேட்டை உழவர் சந்தை அருகே சென்றபோது, 54 வயது நபர் ஒருவர் மாணவியரிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டார்.
அதிர்ச்சியடைந்த மாணவிகள், அந்த நபரை பிடித்து பஸ் ஸ்டாண்ட் புறக்காவல் நிலைய போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
விசாரணையில், உளுந்துார்பேட்டை தாலுகா ஆசனுார் பகுதியைச் சேர்ந்த பாபு மகன் தபரிஆலன், 54; என தெரிய வந்தது. அவரிடம் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாதிக்கப்பட்ட மாணவிகளை பஸ் நிலையத்தில் 30 நிமிடங்களுக்கு மேலாக தங்களது வாகனங்களுக்கு முன்பு நிற்க வைத்து, பொது மக்களின் முன்னிலையிலேயே போலீசார் விசாரணை நடத்தியது கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.