sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

அறுபதாம் கல்யாணம் முடித்து வீடு திரும்பியவர் விபத்தில் பலி

/

அறுபதாம் கல்யாணம் முடித்து வீடு திரும்பியவர் விபத்தில் பலி

அறுபதாம் கல்யாணம் முடித்து வீடு திரும்பியவர் விபத்தில் பலி

அறுபதாம் கல்யாணம் முடித்து வீடு திரும்பியவர் விபத்தில் பலி


ADDED : ஜூன் 11, 2025 08:00 AM

Google News

ADDED : ஜூன் 11, 2025 08:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சின்னசேலம்; சின்னசேலம் அருகே, அறுபதாம் கல்யாணம் முடித்து வீடு திரும்பிய முதியவர், விபத்தில் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கர்நாடக மாநிலம், பெங்களூரு, விஜயாநகர் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ், 60; இவரது அறுபதாம் கல்யாணம் திருக்கடையூரில் நடந்தது. அதற்காக, கர்நாடக மாநில அரசு பஸ்சை வாடகைக்கு எடுத்துக்கொண்டு வந்தனர். திருமணம் முடிந்து, சொந்த ஊருக்கு திரும்பினர்.

நேற்று அதிகாலை 3:00 மணிக்கு விருதாச்சலம்- வி.கூட்ரோடு, தேசிய நெடுஞ்சாலையில் நைனார்பாளையம் அருகே சென்றபோது, அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரியின் பின்புறம் பஸ் மோதியது.

இதில் ரமேஷ் பலத்த காயமடைந்ததார். மேலும் பஸ்சில் பயணம் செய்த அவரது உறவினர்கள் 4 பேரும் காயமடைந்தனர். அருகில் இருந்தவர்கள், அவர்களை மீட்டு சின்னசேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு, ரமேஷ் பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து கீழ்க்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us