/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
குளத்தில்மீன் பிடித்தவர் நீரில் மூழ்கி பலி
/
குளத்தில்மீன் பிடித்தவர் நீரில் மூழ்கி பலி
ADDED : நவ 18, 2024 08:37 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருக்கோவிலுார் ; அரகண்டநல்லுார் அருகே மீன்பிடிக்க குளத்தில் இறங்கியவர் நீரில் மூழ்கி இறந்தார்.
திருக்கோவிலுார் அடுத்த அந்திலி கிராமத்தைச் சேர்ந்தவர் பழனி மகன் ஆதிகேசவன், 30; இவர், நேற்று முன்தினம் மாலை அதே பகுதியில் உள்ள முருகர் கோவில் குளத்தில் மீன் பிடிக்க இறங்கினார். நீச்சல் தெரியாத நிலையில், ஆழமான பகுதிக்கு சென்றதால் நீரில் மூழ்கினார்.
தகவல் அறிந்த திருக்கோவிலுார் தீயணைப்பு நிலைய அலுவலர்கள் விரைந்து சென்று நீரில் மூழ்கி இறந்த ஆதிகேசவன் உடலை இரவு 8:30 மணியளவில் மீட்டனர்.
அரகண்டநல்லுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.