ADDED : நவ 22, 2026 08:57 PM
அ நிறம் | அளவு
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் ஸ்கூட்டரில் இருந்து நிலைதடுமாறி கீழே விழுந்தவர் இறந்தார்.
கள்ளக்குறிச்சி இந்திரா நகரைச் சேர்ந்தவர் முருகேசன் மகன் ஹரிகரன் (எ) மணிகண்டன், 38; பெங்களூருவில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இவரது நண்பர் மூர்த்தி மகன் அருண், 28; இரவரும் நேற்று (நவ.,21) இரவு ஹோண்டா ஸ்கூட்டரில் டோல்கேட்டில் இருந்து கள்ளக்குறிச்சிக்கு சென்றனர்.
ஸ்கூட்டரை அருண் ஓட்டினார். புறவழிச்சாலையில் சென்ற போது திடீரென ஸ்கூட்டரிலிருந்து நிலைதடுமாறி இருவரும் கீழே விழுந்தனர். இதில், படுகாயமடைந்த மணிகண்டன் சம்பவ இடத்திலேயே இறந்தார். அருண் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
புகாரின் பேரில், கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
