/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
தென்கீரனுார் பள்ளியில் மேலாண்மை குழு கூட்டம்
/
தென்கீரனுார் பள்ளியில் மேலாண்மை குழு கூட்டம்
ADDED : ஜூலை 27, 2025 11:11 PM

கள்ளக்குறிச்சி: தென்கீரனுார் அரசு பள்ளியில் போதை பொருள் எதிர்ப்பு மன்றம் ஏற்படுத்த மேலாண்மை குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
கள்ளக்குறிச்சி அடுத்த தென்கீரனுார் அரசு ஆதிதிராவிடர் நல நடுநிலைப்பள்ளியில் நடந்த பள்ளி மேலாண்மைக்குழு கூட்டத்திற்கு பள்ளி தலைமை ஆசிரியர் அருள்மணி தலைமை தாங்கினார். ஊராட்சி உறுப்பினர் கமலா அருள் முன்னிலை வகித்தார். பள்ளி மேலாண்மைக்குழு தலைவர் தவமணி வரவேற் றார்.
சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட கல்வியாளர் செந்தில்குமார், பள்ளியில் இடை நிற்றல் மாணவரை அடையாளம் காண வேண்டும். குழந்தை திருமணம், குழந்தைகள் பாதுகாப்பு, குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு, உயர்கல்வி வழிகாட்டுதல், போதை பொருள் ஒழிப்பு, சிறு சேமிப்பு குறித்து பேசினார்.
பள்ளியில் போதை பொருள் எதிர்ப்பு மன்றம் தொடங்குவது குறித்து ஆலோசனை வழங்கப்பட்டது. ஆசிரியர் ஹேமாவதி நன்றி கூறினார்.