ADDED : அக் 11, 2024 11:09 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருக்கோவிலுார் : மணலுார்பேட்டை, முருக்கம்பாடியில் செல்வவிநாயகர் கோவில் மண்டல பூஜை பூர்த்தி விழா நடந்தது.
இக்கோவிலில், கடந்த ஆகஸ்ட் மாதம் 22ம் தேதி கும்பாபிேஷகம் நடந்தது.
தொடர்ந்து 48 நாட்கள் மண்டல பூஜை விழா நடந்து வந்தது. நிறைவாக நேற்று முன்தினம் காலை விக்னேஸ்வர நடந்தது.
தொடரந்து, மூலவர் செல்வவிநாயகர் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு மகா அபிஷேகம், தீபாராதனை நடந்தது.
ஏற்பாடுகளை கோவில் நிர்வாகி கருணா கரன் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.