ADDED : ஜன 02, 2025 10:58 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ரிஷிவந்தியம்; சூளாங்குறிச்சி அய்யனார் கோவிலில் மண்டல பூஜை நிறைவு விழா நேற்று நடந்தது.
ரிஷிவந்தியம் அடுத்த சூளாங்குறிச்சியில் பழமை வாய்ந்த அய்யனார் கோவில் உள்ளது. இக்கோவிலில் கடந்த நவ., 14ம் தேதி கும்பாபிேஷகம் நடந்தது.
தொடர்ந்து, தினமும் நடந்த மண்டல பூஜையில் தினமும் காலை மற்றும் மாலையில் அய்யனார் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்து, அன்னதானம் வழங்கப்பட்டது.
கும்பாபிஷேகம் முடிந்து 48வது நாளான நேற்று மண்டல பூஜை நிறைவு விழா நடந்தது.
இதையொட்டி, கோவில் வளாகத்தில் விக்னேஷ்வர பூஜை, கலச ஆவாகணம், மகா பூர்ணாகுதி உள்ளிட்ட பூஜைகள் செய்யப்பட்டு, விநாயகர் மற்றும் மூலவர் அய்யனார் சுவாமிகளுக்கு புனித நீர் ஊற்றி, மகா தீபாராதணை காண்பிக்கப்பட்டது.
திரளான பொதுமக்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

