/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
மணிமுக்தா அணை பாசன வாய்க்கால் சீரமைக்க நடவடிக்கை தேவை
/
மணிமுக்தா அணை பாசன வாய்க்கால் சீரமைக்க நடவடிக்கை தேவை
மணிமுக்தா அணை பாசன வாய்க்கால் சீரமைக்க நடவடிக்கை தேவை
மணிமுக்தா அணை பாசன வாய்க்கால் சீரமைக்க நடவடிக்கை தேவை
ADDED : நவ 12, 2024 08:09 AM

மணிமுக்தா அணை பாசன வாய்க்காலில் சேதமடைந்து காணப்படும் இடங்களில் சீரமைப்பு பணி மேற்கொள்ள பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கள்ளக்குறிச்சி அடுத்த சூளாங்குறிச்சி மணிமுக்ததா அணை விவசாயிகளுக்கு முக்கிய நீர் ஆதாரமாக இருக்கிறது.பருவ மழைக் காலங்களில் அணை நிரம்பியதும், பழைய மற்றும் புதிய பாசன வாய்க்கால் வழியாக விவசாய பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படுகிறது. அதன் மூலம் 10 கிராமங்களைச் சேர்ந்த 5,493 ஏக்கர் பரப்பளவிலான விவசாய நிலங்கள் பயன்பெறுகிறது.
இந்நிலையில், அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் எடுத்துச் செல்லும் வாய்க்கால் கட்டமைப்பு போதிய பராமரப்பு இன்றி பல இடங்களில் சேதமடைந்து காணப்படுகிறது.
குறிப்பிட்ட நீளத்திற்கு மட்டுமே பாசன வாய்க்கால் கல் கட்டுமானமாக உள்ளது. மற்றவை மண் கரையால் அமைக்கப்பட்டுள்ளது. இதில் ஆங்காங்கே கற்கள் வைத்து கட்டப்பட்ட கால்வாயிலும் கற்கள் பெயர்ந்து புதர் மண்டியுள்ளது.
மாவட்டத்தில் வடக்கிழக்கு பருவ மழை தீவிரமடைந்து அணை நிரம்பும் என்ற நம்பிக்கையில் விவசாயிகள் காத்திருக்கின்றனர். இந்நிலையில், அணையில் இருந்து செல்லக்கூடிய பாசன வாய்க்காலை செப்பனிட்டு சீரமைக்க நடவடிக்கை எடுக்காமல் இருப்பது விவசாயிகளை அதிருப்தியடைய செய்துள்ளது.
இதனால் பாசன வாய்க்காலில் திறந்து விடப்படும் தண்ணீர் கடை மடை வரை செல்லுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
எனவே, விவசாயிகள் நலன் கருதி பாசன வாய்க்காலை உடனடியாக சீரமைக்க பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

