/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
மணிமுக்தா அணை மீன்பாசி குத்தகை விண்ணப்ப படிவங்கள் வரவேற்பு
/
மணிமுக்தா அணை மீன்பாசி குத்தகை விண்ணப்ப படிவங்கள் வரவேற்பு
மணிமுக்தா அணை மீன்பாசி குத்தகை விண்ணப்ப படிவங்கள் வரவேற்பு
மணிமுக்தா அணை மீன்பாசி குத்தகை விண்ணப்ப படிவங்கள் வரவேற்பு
ADDED : ஏப் 15, 2025 09:04 PM
கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சி மணிமுக்தா அணை மீன்பாசி குத்தகை பெற விருப்பமுள்ளவர்கள் இணையவழி ஏலத்திற்கு ஒப்பந்தபுள்ளி படிவங்களை சமர்ப்பிக்கலாம்.
கலெக்டர் பிரசாந்த் செய்திகுறிப்பு:
கள்ளக்குறிச்சி மணிமுக்தா அணை நீர்தேக்கத்தை 5 ஆண்டுகளுக்கு மீன்பாசி குத்தகை விடப்படுகிறது. இதற்கான இணையவழி ஏலம் அறிவிப்பு சென்னை மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை ஆணையர் மூலம் கடந்த 8ம் தேதி வெளியிடப்பட்டது.
இந்த இணையவழி ஏலத்தில் பங்கேற்க விரும்புவோர் ஒப்பந்தப்புள்ளி படிவம் உள்ளிட்ட இதர படிவங்களை www.tntenders.gov.in என்ற இணையதளத்தில் 19494/எப்3/2024/9 என்ற ஏல அறிவிப்பு எண்ணை உள்ளீடு செய்து இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இந்த இணையத்தில் ஏலம் தொடர்பான அறிவிப்பு, நிபந்தனைகள் மற்றும் இதர விவரங்களையும் அறிந்து கொள்ளலாம்.
இணையவழி ஏலத்தில் ஒப்பந்தப்புள்ளியை வரும் 22ம் தேதி பகல் 2:00 மணி வரை சமர்ப்பிக்கலாம்.
ஏலம் தொடர்பான சந்தேகங்கள் இருப்பின் inlandfisheries15@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம் அல்லது விழுப்புரம் அரசு மருத்துவமனை எதிரே உள்ள மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குனர் அலுவலகத்தை நேரில் அணுகியும் நிவர்த்தி செய்து கொள்ளலாம்.
குத்தகை பெற விருப்பமுள்ளவர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

