/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
மாரத்தான் போட்டி; கலெக்டர் துவக்கி வைப்பு
/
மாரத்தான் போட்டி; கலெக்டர் துவக்கி வைப்பு
ADDED : ஜன 06, 2025 11:58 PM

கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சியில் பேரறிஞர் அண்ணாதுரை மாரத்தான் போட்டியினை கலெக்டர் பிரசாந்த் துவக்கி வைத்தார்.
கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலக வளாகத்தில் இளைஞர் நலன்-விளையாட்டு மேம்பாட்டுத்துறை, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் இணைந்து அண்ணாதுரை மாரத்தான் போட்டி நடந்தது. 17 முதல் 25 வயதுள்ள ஆண்களுக்கு 8 கி.மீ. துாரம், பெண்களுக்கு 5 கி.மீ. துாரம், 25 வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கு 10 கி.மீ. தூரம், பெண்களுக்கு 5 கி.மீ. தூரம் என 2 பிரிவுகளில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு நடந்த போட்டியினை கலெக்டர் பிரசாந்த் கொடியசைத்துத் துவக்கி வைத்தார்.
கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்திலிருந்து துவங்கி கச்சிராப்பாளையம் சாலை வழியாக சென்று மீண்டும் கலெக்டர் அலுவலகம் வரை நடைபெற்றது. மாரத்தான் போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு முதற் பரிசு ரூ.5,000 (4 பேர்), இரண்டாம் பரிசு ரூ.3,000 (4 பேர்), மூன்றாம் பரிசு ரூ.2,000 4 பேர் ) மற்றும் ஆறுதல் பரிசாக 4 முதல் 10 இடங்களைப் பிடிப்பவர்களுக்கு தலா ரூ.1,000 வீதம் 28 நபர்களுக்கும் வழங்கப்பட உள்ளது என கலெக்டர் தெரிவித்தார்.
இதில் மாவட்ட விளையாட்டு அலுவலர் சுரேஷ்குமார் மற்றும் மாணவ, மாணவியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

