/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
மார்க்கெட் கமிட்டி ஜனவரி 2 முதல் செயல்பட துவங்கும்
/
மார்க்கெட் கமிட்டி ஜனவரி 2 முதல் செயல்பட துவங்கும்
மார்க்கெட் கமிட்டி ஜனவரி 2 முதல் செயல்பட துவங்கும்
மார்க்கெட் கமிட்டி ஜனவரி 2 முதல் செயல்பட துவங்கும்
ADDED : டிச 27, 2024 07:08 AM
திருக்கோவிலுார்: அரகண்டநல்லூர் மார்க்கெட் கமிட்டி வரும் 2ம் தேதி முதல் வழக்கம்போல் செயல்படும் என விற்பனை கூட கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
பெஞ்சல் புயல் வெள்ளத்தால், அரகண்டநல்லூர் மார்க்கெட் கமிட்டி பெரும் அளவில் பாதிக்கப்பட்டது.
சுற்று சுவர்கள் இடிந்து விழுந்ததுடன், குடோன்களில் வியாபாரிகள் இருப்பு வைத்திருந்த விளை பொருட்கள் அடித்து செல்லப்பட்டும், சேதமடைந்தும் பெரும் இழப்பை சந்தித்தது.
இதன் காரணமாக மார்க்கெட் கமிட்டி செயல்படுவதில் சிக்கல் நிலவி வந்தது. கமிட்டி நிர்வாகம் சீரமைப்பு பணிகளை மேற்கொண்டு இருக்கும் நிலையில், வரும் ஜனவரி 2ம் தேதி முதல் ஒழுங்குமுறை விற்பனை கூடம் வழக்கம் போல் செயல்படும் என கமிட்டி கண்காணிப்பாளர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.