/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
மார்க்கெட் கமிட்டிகளில் ரூ. 31.73 லட்சத்திற்கு வர்த்தகம்
/
மார்க்கெட் கமிட்டிகளில் ரூ. 31.73 லட்சத்திற்கு வர்த்தகம்
மார்க்கெட் கமிட்டிகளில் ரூ. 31.73 லட்சத்திற்கு வர்த்தகம்
மார்க்கெட் கமிட்டிகளில் ரூ. 31.73 லட்சத்திற்கு வர்த்தகம்
ADDED : மார் 18, 2025 04:10 AM

கள்ளக்குறிச்சி, : கள்ளக்குறிச்சி மார்க்கெட் கமிட்டிக்கு, மக்காச்சோளம் 300 மூட்டை, உளுந்து 250, கம்பு 27, எள் 20, வரகு 15, மணிலா 5, ராகி 3, தட்டைப்பயிர், ஆமணக்கு தலா ஒரு மூட்டை என 622 மூட்டை விளை பொருட்கள் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டது. ஒரு மூட்டை மக்காச்சோளம் 2,403, உளுந்து 7,254, கம்பு 2,458, எள் 12,374, வரகு 2,079, வேர்க்கடலை 8,380, ராகி 3,951, தட்டைப்பயிர் 3,099, ஆமணக்கு 6,539 ரூபாய் என மொத்தம் 37 லட்சத்து 73 ஆயிரத்து 853 ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது.
சின்னசேலம் கமிட்டியில் வரகு 50 மூட்டை, மக்காச்சோளம் 5 என மொத்தம் 55 மூட்டை விளை பொருட்கள் கொண்டு வரப்பட்டது. ஒரு மூட்டை வரகு 2,212, மக்காச்சோளம் 2,389 ரூபாய் என மொத்தம் ஒரு லட்சத்து 10 ஆயிரத்து 992 ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது.
தியாகதுருகம் கமிட்டியில் நெல் 125 மூட்டை, உளுந்து 55, கம்பு 35 என மொத்தம் 215 மூட்டை விளைபொருட்கள் கொண்டு வரப்பட்டது. நெல் 2,225, உளுந்து 7,450, கம்பு 2,612 ரூபாய் என மொத்தம் 6 லட்சத்து 76 ஆயிரத்து 841 ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது.