ADDED : பிப் 25, 2024 05:40 AM

திருக்கோவிலுார் : திருக்கோவிலுார், கீழையூர் வீரட்டானேஸ்வரர் கோவிலில் மாசி மகத்தை முன்னிட்டு தென்பெண்ணை ஆற்றில் தீர்த்தவாரி உற்சவம் நடந்தது.
அதனையொட்டி, அலங்கரிக்கப்பட்ட சுவாமி கோவிலை வலம் வந்து விழா மண்டபத்தில் எழுந்தருளினார். மதியம் 1:30 மணிக்கு தென்பெண்ணை ஆற்றில் திரிசூலத்தில் ரிஷபாவுடன் வேத மந்திரங்கள் முழங்க திரிசூலத்திற்கு சிறப்பு அபிஷேகம், பக்தர்களின் நமச்சிவாய கோஷத்துடன் புனித நீராடல் வைபவம் நடந்தது. தொடர்ந்து சுவாமிக்கு தீபாராதனை நடந்தது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
கள்ளக்குறிச்சி
புண்டரீகவல்லி தாயார் சமேத தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோவிலில் நேற்று காலை விஸ்வரூப தரிசனம், கோ பூஜையும் நடந்தது. தொடர்ந்து, சிவகாமி அம்மன் உடனமர் சிதம்பரேஸ்வரர் சன்னதியில் மூலஸ்தான மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து உலக நலனுக்காக மகாசங்கல்பம் மற்றும் மகா தீபாராதனை நடந்தது.
மரக்காணம்
கூனிமேடு மீனவ கிராமத்தில் உள்ள எல்லையம்மன், கெங்கையம்மன் கோவில்களில் நடந்த மாசி மக தீர்த்தவாரி திருவிழாவில், 2 க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட சுவாமிகளுக்கு கடலில் தீர்த்தவாரி யாகி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.