வெறிநோய் கடி பாதிப்பினை தவிர்க்க வழிமுறைகள்; கலெக்டர் அறிவுறுத்தல்
வெறிநோய் கடி பாதிப்பினை தவிர்க்க வழிமுறைகள்; கலெக்டர் அறிவுறுத்தல்
ADDED : செப் 27, 2026 03:40 PM
கள்ளக்குறிச்சி: மருத்துவரின் ஆலோசனைப்படி நாய், பூனைகளுக்கு ரேபிஸ் தடுப்பூசி போட வேண்டும் என கலெக்டர் அறிவுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து கலெக்டர் பத்மஜா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு : இன்று 28ம் தேதி உலக வெறிநோய் கடி நாள் ஆகும். ரேபிஸ் எனும் வெறிநோய் கடி என்பது ஒரு தீவிரமான வைரஸ் நோய். இதன் அறிகுறிகள் தோன்றிய பிறகு, இரு பெரும்பாலும் உயிரிழப்பை ஏற்படுத்திவிடும். பாதிக்கப்பட்ட விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு பரவும் இந்த நோய் நரம்பு மண்டலம், மூளையை பாதிக்கும்.
வீட்டு விலங்குகள் மற்றும் காட்டு விலங்குகள் உள்ளிட்ட அனைத்து பாலுாட்டிகளுக்கும் ரேபிஸ் நோய் ஏற்படலாம். நாய்க்கடி, கீறல்கள், காற்று, பாதிக்கப்பட்ட திசுக்களுடன் தொடர்பு மூலமாக இந்த பரவுகிறது. தடுப்பூசி செலுத்துவது, உரிய சிகிச்சை மூலம் இந்நோயை தடுக்கலாம். மருத்துவ அறிகுறிகள் தோன்றியவுடன், ரேபிஸ் நோய் கிட்டத்தட்ட 100 சதவீத உயிரிழப்பை ஏற்படுத்திவிடும்.
எனவே கால்நடை மருத்துவரின் ஆலோசனைப்படி நாய், பூனைகளுக்கு ரேபிஸ் தடுப்பூசி போட வேண்டும். செல்ல பிராணிகளை பொறுப்பாக கவனிக்க வேண்டும். அறிமுகமில்லாத நாய்களை விரட்டுவது, தொந்தரவு செய்வது, உணவளிப்பது, தொட முயற்சிப்பது போன்றவைகளை தடுத்து இந்நோய் பரவலை கட்டுப்படுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
