UPDATED : அக் 13, 2026 04:29 PM
ADDED : அக் 13, 2026 04:27 PM

அ நிறம் | அளவு
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் மெக்கானிக் துாக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி அடுத்த உலகியநல்லுாரைச் சேர்ந்தவர் மவுலானா மகன் அப்துல்மஜித், 37; மெக்கானிக். இவர், தனது குடும்பத்தினருடன் கள்ளக்குறிச்சியில் வாடகை வீட்டில் வசித்து வந்தார்.
மது அருந்தி விட்டு வீட்டிற்கு வரும் அப்துல்மஜித் குடும்பத்தினரிடம் தகராறு செய்து வந்துள்ளார். கடந்த 11ம் தேதி மாலை ஏற்பட்ட தகராறில் மனைவி சபானா வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளார்.
இதனால் மனமுடைந்த அப்துல்மஜித் மின்விசிறியில் துாக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
