/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான மருத்துவ மதிப்பீட்டு முகாம்
/
மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான மருத்துவ மதிப்பீட்டு முகாம்
மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான மருத்துவ மதிப்பீட்டு முகாம்
மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான மருத்துவ மதிப்பீட்டு முகாம்
ADDED : நவ 28, 2025 05:25 AM

உளுந்துார்பேட்டை: நவ. 28-: உளுந்துார்பேட்டை வட்டார வள மையத்தில் மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான மருத்துவ மதிப்பீட்டு முகாம் நடந்தது.
முகாமிற்கு வட்டார் வளமைய மேற்பார்வையாளர் சக்திவேல் தலைமை தாங்கினார். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜா, மாற்றுத்திறன் மாணவர்களுக்கான திட்டங்கள் குறித்து எடுத்துரைத்து பேசினார். முகாமில் ஆசிரியர் பயிற்றுநர்கள் காசிலிங்கம், அரசு, ரம்யா, சரிதா, ஜெயலட்சுமி, ஆறுமுகம், சிறப்பு பயிற்றுநர்கள் ஜானகிராமன், ராஜலட்சுமி, சரண்யா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
முகாமில் உளுந்துார்பேட்டை மற்றும் திருக்கோவிலுார் ஒன்றியங்களுக்குட்பட்ட 150க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்க பரிசோதனை செய்யப்பட்டு அடையாள அட்டை வழங்கப்பட்டது.