/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
அரகண்டநல்லுார் பேரூராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கு மருத்துவ முகாம்

ADDED : செப் 09, 2025 09:26 PM

திருக்கோவிலுார்; அரகண்டநல்லுார் பேரூராட்சியில் துாய்மை பணியாளர்களுக்கு மருத்துவ முகாம் நடந்தது.
அரகண்டநல்லுார் பேரூராட்சியில் முகையூர் ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில், பேரூராட்சி பணியாளர்கள் மற்றும் துாய்மை பணியாளர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது. டாக்டர் அன்புமொழி தலைமையில் செவிலியர் மீனா உள்ளிட்ட மருத்துவக் குழுவினர் பங்கேற்று துாய்மை பணியாளர்களுக்கு ரத்த அழுத்தம், நீரிழிவு, கண் மற்றும் தோல் நோய் உள்ளிட்ட மருத்துவ பரிசோதனைகளை மேற்கொண்டனர்.
முகாமினை பேரூராட்சி தலைவர் அன்பு துவக்கி வைத்தார். பொறுப்பு செயல் அலுவலர் அண்ணாதுரை முன்னிலை வகித்தார். முகாமிற்கான ஏற்பாடுகளை பேரூராட்சி இளநிலை உதவியாளர் பாலசுப்பிரமணியன், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சதீஷ் பாபு, சுகாதார ஆய்வாளர் சுந்தர ரமணன் செய்திருந்தனர்.