/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
மாற்றுத்திறனாளிகள் மருத்துவ முகாம் இனி சனிக்கிழமை தோறும் நடக்கும்
/
மாற்றுத்திறனாளிகள் மருத்துவ முகாம் இனி சனிக்கிழமை தோறும் நடக்கும்
மாற்றுத்திறனாளிகள் மருத்துவ முகாம் இனி சனிக்கிழமை தோறும் நடக்கும்
மாற்றுத்திறனாளிகள் மருத்துவ முகாம் இனி சனிக்கிழமை தோறும் நடக்கும்
ADDED : ஜூலை 26, 2025 11:17 PM
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் மாற்றுத் திறனாளிகளுக்கான மருத்துவ முகாம் இனி சனிக்கிழமைகளில் மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர் அந்தோணிராஜ் செய்திக்குறிப்பு:
கள்ளக்குறிச்சி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் ஒவ்வொரு வியாழன் தோறும் மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை வழங்குவதற்கான மருத்துவ முகாம் நடத்தப்பட்டு வருகிறது.
ஆனால், மருத்துவக் கல்லுாரியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம் நடத்தப்பட்டதால் நேற்று நடைபெற இருந்த மருத்துவ முகாம் ரத்து செய்யப்பட்டது.
ஆனால், தொடர்ந்து இனி ஒவ்வொரு சனிக்கிழமைகளிலும், மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம் நடத்தப்பட இருப்பதால், இந்த முகாம்கள் நடக்கும் இடத்திலேயே மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை வழங்கும் சிறப்பு முகாம்களும் நடத்தப்படும்.