/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
சின்னசேலம் ஊராட்சி பகுதியில் மருத்துவ பரிசோதனை முகாம்
/
சின்னசேலம் ஊராட்சி பகுதியில் மருத்துவ பரிசோதனை முகாம்
சின்னசேலம் ஊராட்சி பகுதியில் மருத்துவ பரிசோதனை முகாம்
சின்னசேலம் ஊராட்சி பகுதியில் மருத்துவ பரிசோதனை முகாம்
ADDED : நவ 23, 2024 06:42 AM

சின்னசேலம் : சின்னசேலம் பகுதியில் குழந்தைகளை தாக்கும் பொண்ணுக்கு வீங்கி எனும் தொற்று நோய் தடுப்புக்கான மருத்துவ பரிசோதனை முகாம் நடந்தது.
சின்னசேலம் பகுதியில் பருவ நிலை மாற்றத்தால் குழந்தைகளைத் தாக்கும் பொண்ணுக்கு வீங்கி எனும் மண்ணம்மை தொற்றுநோய் பரவுவதை தடுக்கும் பொருட்டு மருத்துவ முகாம் நடந்தது.
மேல்நாரியப்பனுார் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் தகரை ஊராட்சி ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி மற்றும் தகரை, பாண்டியங்குப்பம், தாகம்தீர்த்தாபுரம், மெய்யனுார், தென்பொன்பரப்பி, எலவடி ஆகிய கிராமங்களில் பரிசோதனை செய்து குழந்தைகளுக்கு தடுப்பு மருந்து வழங்கப்பட்டது.
சுகாதார அலுவலர் கோகுல் தலைமையிலான மருத்துவ குழுவினர் பரிசோதனை செய்தனர். முகாமில் தகரை ஊராட்சி தலைவி நீலாவதி முருகன், பள்ளி தலைமையாசிரியர் நடராஜன் மற்றும் ஆசிரியர்கள், தன்னார்வலர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.