/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
மருத்துவ கல்லுாரி புனரமைப்பு : கலெக்டர் ஆய்வு
/
மருத்துவ கல்லுாரி புனரமைப்பு : கலெக்டர் ஆய்வு
ADDED : மார் 29, 2025 05:13 AM

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அரசு மருத்துவ கல்லுாரி புனரமைப்பு பணிகளை கலெக்டர் பிரசாந்த் ஆய்வு செய்தார்.
கள்ளக்குறிச்சி அடுத்த சிறுவங்கூர் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் பல்வேறு பிரிவுகள் இயங்கி வருகின்றன. மருத்துவமனை வளாகத்தில் ஏற்கனவே செயல்பட்டு வந்த அரசு கலைக்கல்லுாரி பழைய கட்டடத்தை மருத்துவமனை நிர்வாக அலுவலக கட்டடமாக பயன்படுத்தும் வகையில், ரூ 2.2 கோடி மதிப்பில் புனரமைக்கும் பணிகள் நடக்கின்றன.
இந்த பணிகளை கலெக்டர் பிரசாந்த் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பணிகளை விரைவாக முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
ஆய்வில், அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை டீன் பவானி மற்றும் பொதுப்பணித்துறை அலுவலர்கள், மருத்துவர்கள் பலர் உடனிருந்தனர்.