/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
மருத்துவக் கல்லுாரி மாணவர்களுக்கு வெள்ளை அங்கி அணிவிக்கும் நிகழ்ச்சி
/
மருத்துவக் கல்லுாரி மாணவர்களுக்கு வெள்ளை அங்கி அணிவிக்கும் நிகழ்ச்சி
மருத்துவக் கல்லுாரி மாணவர்களுக்கு வெள்ளை அங்கி அணிவிக்கும் நிகழ்ச்சி
மருத்துவக் கல்லுாரி மாணவர்களுக்கு வெள்ளை அங்கி அணிவிக்கும் நிகழ்ச்சி
ADDED : நவ 10, 2024 04:56 AM

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் முதலாம் ஆண்டு மருத்துவப் படிப்பில் சேர்ந்துள்ள மருத்துவ மாணவர்களுக்கு வெள்ளை அங்கி அணிவிக்கும் நிகழ்ச்சி நடந்தது.
நிகழ்ச்சியில் மருத்துவ மாணவர்களுக்கு வெள்ளை அங்கியினை அணிவித்த கலெக்டர் பேசியதாவது : நவீன காலத்தில் மருத்துவத்துறை பல்வேறு பரிணாமங்களில் வளர்ச்சி அடைந்து வருகிறது. 'வெப் மெட்' செயலி மூலம் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் நோய்களின் தன்மை, அறிகுறிகள் மற்றும் நோய்க்குரிய மருந்து மாத்திரைகள் போன்றவற்றை அறிந்து கொள்ள முடியும். இதேபோன்று 'ஆர்டிபிசியல் இன்டலிஜன்ஸ்' மூலமும் நோய்கள் குறித்து தெரிந்து கொள்ளலாம்.
மருத்துவம் படிக்கும் மாணவர்கள் வருங்காலத்தில் சிறந்த மருத்துவர்களாக உருவாக, புத்தகங்களை மட்டும் படிக்காமல் நவீன மருத்துவ தொழில்நுட்பங்கள் குறித்தும் தெரிந்து வைத்திருக்க வேண்டியது அவசியம். இதுவே வருங்காலத்தில் சிறந்த மருத்துவர்களாக உருவாவதற்கு உதவி புரியும்' என பேசினார்.
நிகழ்ச்சியில் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லுாரி முதல்வர் பவானி, மருத்துவமனைக் கண்காணிப்பாளர் நேரு, மருத்துவர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.