/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
மனநல காப்பகங்கள் ஆணையத்தில் பதிவு செய்ய வேண்டும்: கலெக்டர் அறிவுறுத்தல்
/
மனநல காப்பகங்கள் ஆணையத்தில் பதிவு செய்ய வேண்டும்: கலெக்டர் அறிவுறுத்தல்
மனநல காப்பகங்கள் ஆணையத்தில் பதிவு செய்ய வேண்டும்: கலெக்டர் அறிவுறுத்தல்
மனநல காப்பகங்கள் ஆணையத்தில் பதிவு செய்ய வேண்டும்: கலெக்டர் அறிவுறுத்தல்
ADDED : ஆக 26, 2025 11:48 PM
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் செயல்படும் அனைத்து வகையான மனநல நிறுவனங்களும் தமிழ்நாடு மனநல ஆணையத்தில் பதிவு செய்ய வேண்டும் என கலெக்டர் அறிவுறுத்தி உள்ளார்.
இது குறித்து கலெக்டர் பிரசாந்த் செய்திக்குறிப்பு :
கள்ளக்குறிச்சி மாவட்டம் முழுவதும் மனநல மருத்துவமனைகள், போதை மீட்பு சிகிச்சை மற்றும் மறுவாழ்வு மையங்கள், மனநலம் பாதிக்கப் பட்டவர்களுக்கான மறு வாழ்வு மையங்கள், போதை பயன்பாட்டிற்கு ஆளானவர்களுக்கான மறுவாழ்வு மையங்கள் உள்ளிட்ட மனநல நிறுவனங்கள் - மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இத்தகைய மனநல நிறுவனங்கள், அனைத்து மனநல பராமரிப்பு சட்டம் 2017-ன்படி உரிமம் பெற மாநில மனநல ஆணையத்திடம் பதிவு செய்ய வேண்டும்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இவ்வாறு பதிவு பெறாமல் செயல்படும் மனநல மையங்கள் உரிய முறையில் முதன்மை செயல் அலுவலர், தமிழ்நாடு மாநில மனநல ஆணையம், அரசு மனநல காப்பக வளாகம், மேவாக்கம் குளம் சாலை, கீழ்ப்பாக்கம், சென்னை- 600 010 என்ற முகவரியிலும், 044-26420965 என்ற தொலைபேசி எண்ணிலும், Email : tnsmha@gmail.com என்ற அலுவலகத்தில் பதிவு செய்ய ஒரு மாத காலத்திற்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் https://tnhealth.tn.gov.in/tngovin/dme/dme.php என்ற இணையதள முகவரியில் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மனநல மையங்களை பதிவு செய்வதற்கான விண்ணப்பங்களை மேற்காணும் இணையதள முகவரியிலோ, தமிழ்நாடு மாநில மனநல ஆணைய அலுவலகத்தில் நேரடியாகவோ அல்லது தபால் மூலமாகவோ பெற்றுக் கொள்ளலாம். கூடுதல் விபரங்களுக்கு 044-2642 0965 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம்.
இதன்படி, பதிவு செய்யப்படாமல் இயங்கும் அனைத்து மனநல மையங்கள்-நிறுவனங்கள் ஒரு மாத காலத்திற்குள் தமிழ்நாடு மாநில மனநல ஆணைய அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகின்றது. உரிமம் பெறாமல் செயல்படும் இத்தகைய மனநல மையங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.