தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ மனவளக்கலை பயிற்சி முகாம்

மனவளக்கலை பயிற்சி முகாம்

மனவளக்கலை பயிற்சி முகாம்


ADDED : அக் 01, 2024 07:01 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 01, 2024 07:01 AM


Follow on Google
அ நிறம் | அளவு

உளுந்துார்பேட்டை: உளுந்தபட்டையில் மனவளக்கலை மன்ற அறக்கட்டளை சார்பில் மனவளக்கலை பயிற்சி முகாம் நடந்தது.

மனவளக்கலை மன்ற துணைத் தலைவர் அன்பழகன் தலைமை தாங்கினார். நிர்வாக அறங்காவலர் பால கணபதி வரவேற்றார்.

உலக சமுதாய சேவா சங்க விரிவாக்க இணை இயக்குனர் அருள்ஜோதி சிறப்புரையாற்றினார்.

முகாமில் நோய் இல்லாமல் ஆரோக்கியமாக வாழ எளிய முறை உடற்பயிற்சி. மன அமைதியோடு தன்னம்பிக்கோடு வாழ தியான பயிற்சி. சினம் தவிர்த்து கவலை ஒழித்து குடும்பத்தில் அமைதியோடும் அன்போடும் கருணையோடும் வாழும் உயர் பண்பினை பெற அகத்தாய்வு பயிற்சி.

கை, கால் வலி, மூட்டு வலி, முதுகு வலி, சர்க்கரை நோய் மற்றும் மன கவலைகளை அகற்ற சிறப்பு பயிற்சிகள் உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டன.

விழுப்புரம் மண்டல தலைவர் ரவிச்சந்திரன், செயலாளர் வேல்முருகன், பொருளாளர் ரவி, துணைத் தலைவர்கள் திருநாவுக்கரசு, ஏழுமலை, பேராசிரியர் குணசேகரன், நிர்வாகிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.

மனவளக்கலை மன்ற செயலாளர் ஆதி அண்ணாமலை நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us