ADDED : ஆக 15, 2025 10:50 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி, ; கண்டாச்சிமங்கலத்தில் மனநிலை பாதிக்கப்பட்ட நபர் இறந்தது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
கள்ளக்குறிச்சி அடுத்த கண்டாச்சிமங்கலத்தைச் சேர்ந்தவர் சுந்தர்ராஜன் மகன் மணிவாசகம், 21; மனநிலை பாதிக்கப்பட்டவர். கடந்த 13ம் தேதி வீட்டிலிருந்து வெளியே சென்ற மணிவாசகம் வீடு திரும்பவில்லை. பல்வேறு இடங்களில் தேடிய நிலையில், கண்டாச்சிமங்கலம் மணிமுக்தா நதி ஓடை பகுதியில் மணிவாசகம் இறந்து கிடந்தது தெரியவந்தது. போலீசார் மணிவாசகத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, அவர் எப்படி இறந்தார் என்பது குறித்து வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.