/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
'மெட்டல் கிராஷ் பேரியர்' திருட்டு மர்ம நபர்களுக்கு போலீஸ் வலை
/
'மெட்டல் கிராஷ் பேரியர்' திருட்டு மர்ம நபர்களுக்கு போலீஸ் வலை
'மெட்டல் கிராஷ் பேரியர்' திருட்டு மர்ம நபர்களுக்கு போலீஸ் வலை
'மெட்டல் கிராஷ் பேரியர்' திருட்டு மர்ம நபர்களுக்கு போலீஸ் வலை
ADDED : பிப் 20, 2024 12:26 AM

சங்கராபுரம் : சங்கராபுரம் அருகே சாலையோர 'மெட்டல் கிராஷ் பேரியர்'களை லாரியில் கடந்த முயன்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
சங்கராபுரம் அடுத்த ராஜபாண்டலம் - முக்கனுார் சாலையில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் சாலையோரம் 'மெட்டல் கிராஷ் பேரியர்' தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தது.
நேற்று முன் தினம் இரவு மர்ம நபர்கள் சிலர் சாலையில் இருந்த 2 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 'மெட்டல் கிராஷ் பேரியர்'களை கழற்றி லாரியில் ஏற்றிக் கொண்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக சென்ற இரவு நேர ரோந்து போலீசாரைப் பார்த்ததும் அந்த கும்பல் லாரியை விட்டு விட்டு தப்பியோடியது.
போலீசார் லாரியுடன் 'மெட்டல் கிராஷ் பேரியர்'களை கைபற்றி வழக்குப் பதிந்து தப்பியோடிய மர்ம நபர்களைத் தேடி வருகின்றனர்.