/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
மெத்தனால் விற்பனை; கடைகளில் போலீஸ் ஆய்வு
/
மெத்தனால் விற்பனை; கடைகளில் போலீஸ் ஆய்வு
ADDED : ஜூன் 15, 2025 10:35 PM

கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சியில் உள்ள 'ஹார்டுவேர்' கடைகளில் மெத்தனால், எத்தனால் விற்பனை குறித்து அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
கருணாபுரம், சேஷசமுத்திரம் மற்றும் மாதவச்சேரி பகுதிகளில் கடந்த 2024ம் ஆண்டு ஜூன் மாதம் மெத்தனால் கலந்த கள்ளச்சாராயம் குடித்து 69 பேர் இறந்தனர்.
இச்சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
தொடர்ந்து, மாவட்டத்தில் சாராயம், கஞ்சா மற்றும் குட்கா விற்பனையை தடுக்க போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழகத்தில் மெத்தனால் விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், உரிய அனுமதி பெற்று மெத்தனாலை பயன்படுத்தலாம்.
இந்நிலையில், கள்ளக்குறிச்சி கலால் உதவி ஆணையர் செந்தில்குமார் தலைமையில், மதுவிலக்கு அமலாக்க பிரிவு இன்ஸ்பெக்டர் எழிலரசி, மத்திய நுண்ணறிவு பிரிவு போலீசார் செல்வம் ஆகியோர் நகர பகுதியில் உள்ள 'ஹார்டுவேர்' கடைகளில் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
கடையில் அரசு அனுமதியின்றி மெத்தனால், எத்தனால் இருப்பு வைக்கப்பட்டுள்ளதா, நுகர்வோருக்கு விற்பனை செய்யப்படுகிறதா என்பது குறித்து ஆய்வு நடந்தது.
தொடர்ந்து, அரசு அனுமதி பெறாமல் மெத்தனால், எத்தனாலை விற்பனை செய்யக்கூடாது, விதிமுறை மீறி விற்பனை செய்யும் பட்சத்தில் கடை உரிமையாளர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டது.
மேலும், 'தின்னர்'களை அதிகளவு விற்பனை செய்யக்கூடாது என அறிவுறுத்தப்பட்டது.