/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
சாமுண்டீஸ்வரி கோவிலில் பால்குடம் ஊர்வலம்
/
சாமுண்டீஸ்வரி கோவிலில் பால்குடம் ஊர்வலம்
ADDED : ஆக 15, 2025 10:56 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி,; தண்டலை சாமுண்டீஸ்வரி அம்மன் கோவிலில் 18ம் ஆண்டு ஆடிமாத பால்குடம் ஊர்வலம் நடந்தது.
ஊர்வலத்தையொட்டி, காலை 9:00 மணியளவில் கள்ளக்குறிச்சி கோமுகி நதிக்கரையிலிருந்து கச்சேரி சாலை, தியாகதுருகம் சாலை வழியாக சக்தி அழைத்தல், பூங்கரம், பால்குடம் ஊர்வலம் நடந்தது.
தொடர்ந்து சாமுண்டீஸ்வரி அம்மனுக்கு பால் அபிேஷகம் மற்றும் சிறப்பு அலங்காரம் செய்து மகா தீபாராதனை நடந்தது.
திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது.