/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
முத்துமாரியம்மன் கோவிலில் பால்குட ஊர்வலம்
/
முத்துமாரியம்மன் கோவிலில் பால்குட ஊர்வலம்
ADDED : ஆக 02, 2025 07:35 AM

தியாகதுருகம் : கலையநல்லுார் முத்துமாரியம்மன் கோவிலில் ஆடி மாத வெள்ளிக்கிழமையையொட்டி பால்குட ஊர்வலம் நேற்று நடந்தது.
தியாகதுருகம் அடுத்த கலையநல்லுார் கிராமத்தில் உள்ள பிரசித்தி பெற்ற முத்துமாரியம்மன் கோவிலில் ஆடி மாத 3 வது வெள்ளிக்கிழமையொட்டி பால்குட ஊர்வலம் நடந்தது. நிகழ்ச்சிக்கு, தியாகதுருகம் அ.தி.மு.க., வடக்கு ஒன்றிய செயலாளர் அய்யப்பா தலைமை தாங்கினார். முன்னாள் எம்.எல்.ஏ., பிரபு, அ.தி.மு.க., நகர செயலாளர் ஷியாம்சுந்தர் முன்னிலை வகித்தனர்.
நேற்று காலை மூலவர் முத்துமாரியம்மனுக்கு பால், தயிர், சந்தனம், இளநீர் உட்பட 16 வகையான பொருட்களை கொண்டு அபிஷேகம் செய்து, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து, பக்தர்கள் பால்குடம் ஏந்தியவாறு முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாக சென்றனர்.
அ.தி.மு.க., பிற அணி ஒன்றிய நிர்வாகிகள் ஜெயச்சந்திரன், குமரவேல், நகர துணை செயலாளர் கிருஷ்ணராஜ், ஊராட்சி தலைவர் சின்னதுரை, முன்னாள் ஊராட்சி தலைவர்கள் மணிவண்ணன், குமார், நகர ஜெ., பேரவை செயலாளர் நம்பி, மாவட்ட பிரதிநிதி மணிவண்ணன், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் மூர்த்தி கலந்து கொண்டனர்.

