/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
சக்தி புற்று மாரியம்மன் கோவிலில் பால்குட ஊர்வலம்
/
சக்தி புற்று மாரியம்மன் கோவிலில் பால்குட ஊர்வலம்
ADDED : ஆக 18, 2025 12:14 AM

கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சி சக்தி புற்று மாரியம்மன் கோவிலில் ஆடிப்பெரு விழாவையொட்டி பால்குடம் மற்றும் அக்னி சட்டி ஊர்வலம் நடந்தது.
கள்ளக்குறிச்சி சக்தி புற்று மாரியம்மன் கோவிலில் 38ம் ஆண்டு ஆடிப் பெருவிழாவையொட்டி, மகா கணபதி ஹோமம், மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. கள்ளக்குறிச்சி கோமுகி கரையில் இருந்து அம்மனுக்கு சக்தி அழைத்தல், பூங்கரம், தீர்த்தகுடம், பால்குடம், அக்னி சட்டி ஊர்வலம் நகரின் முக்கிய வீதிகளின் வழியாக நடந்தது.
சிறப்பு அபிஷேகம் செய்து, சந்தனகாப்பு அலங்காரத்துடன் மகாதீபராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று அம்மனை தரிசனம் செய்தனர். தொடர்ந்து உற்சவ மூர்த்திகள் சுவாமி வீதி உலா நடந்தது.

