/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
ஏந்தல் கிராமத்தில் பால்குட ஊர்வலம்
/
ஏந்தல் கிராமத்தில் பால்குட ஊர்வலம்
ADDED : ஆக 09, 2025 12:00 AM

ரிஷிவந்தியம் : ஏந்தல் கிராம மாரியம்மன் மற்றும் எல்லையம்மன் கோவிலில் பால்குட ஊர்வலம் நடந்தது.
வாணாபுரம் அடுத்த ஏந்தல் கிராமத்தில் உள்ள மாரியம்மன் மற்றும் எல்லையம்மன் கோவிலில் ஆடி மாத பால்குட ஊர்வலம் நேற்று நடந்தது. நேற்று காலை அம்மன் சுவாமிகளுக்கு பால், தயிர், இளநீர், தேன், சந்தனம் உட்பட 16 வகையான பொருட்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்து, மகா தீபாராதனை நடந்தது.
தொடர்ந்து, 50க்கும் மேற்பட்ட பெண்கள் பால்குடம் ஏந்தி முக்கிய வீதி வழியாக சென்றனர்.அம்மனுக்கு அபிஷேகம் நடந்தது. மாலை ஊரணி வைத்து சுவாமிக்கு படையலிட்டு வழிபட்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஊர்பொதுமக்கள் மற்றும் கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.