ADDED : ஆக 15, 2026 04:11 PM
அ நிறம் | அளவு
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அடுத்த சூளாங்குறிச்சியில் உள்ள தீப்பாஞ்சலி அம்மன், பாப்பாத்தி அம்மன், கருப்புசாமி மற்றும் கன்னிமார் கோவிலில் ஆடிமாதத்தையொட்டி பால்குடம் ஊர்வலம் நடந்தது.
இதையொட்டி சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது. நோய் நீங்கவும், குழந்தை பாக்கியம் பெறவும், திருமணத்தடை நீங்கவும் நடந்த ஊர்வலத்தில், 150க்கும் மேற்பட்ட பெண்கள் பால்குடம் ஏந்தி ஊர்வலமாகச் சென்று நேர்த்திக் கடனை செலுத்தினர்.
ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர். தொடர்ந்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
