தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ குறுமைய அளவிலான தடகள விளையாட்டு போட்டிகள்   

குறுமைய அளவிலான தடகள விளையாட்டு போட்டிகள்   

குறுமைய அளவிலான தடகள விளையாட்டு போட்டிகள்   


ADDED : ஆக 12, 2026 05:41 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 12, 2026 05:41 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கள்ளக்குறிச்சி: சின்னசேலம்  குறுமைய அளவில் பள்ளி மாணவர்களுக்கான தடகள விளையாட்டு போட்டிகள் நடந்தது. 

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அனைத்து அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளின் 14, 17, 19 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கான குறு மைய விளையாட்டு போட்டிகள் நடந்து வருகிறது. இதில் பீச் வாலிபால், டேபில் டென்னிஸ், கால்பந்து, வாலிபால், கபடி, ஹாக்கி, கோ– கோ உள்ளிட்ட பல்வேறு குழு மற்றும் ஓட்டபந்தயம், உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல் உள்ளிட்ட பல்வேறு தடகள விளையாட்டு போட்டிகள் நடக்கிறது. இதில் 40க்கும் மேற்பட்ட பள்ளிகளைச் சேர்ந்த 300 மாணவ மாணவிகள் பங்கேற்றனர். 

சின்னசேலம் குறு மையத்திற்கான விளையாட்டு போட்டிகள் தொட்டியம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடக்கிறது. குழு விளையாட்டு போட்டிகளை தொடர்ந்து தற்போது ஓட்டபந்தயம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், போல்வால்ட் , குண்டு எறிதல், வட்டு எறிதல், ஈட்டி எறிதல் உள்ளிட்ட விளையாட்டு போட்டிகள் துவங்கி  நடந்து வருகிறது. மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் மோகன் செல்வம் மேற்பார்வையில் போட்டிகள் நடக்கிறது. 

இதில் பள்ளி தலைமையாசிரியர் ராஜா, உடற்கல்வி இயக்குனர்கள் செந்தமிழ் செல்வன், ராதாகிருஷஅணன், பாலுசாமி, மணிமேகலை, சுனோ, உடற்கல்வி ஆசிரியர்கள் ஆனந்தன், பாலு, சங்கர், ஜெயசுதா, ஆக்னஸ்மேரி, தினகரன், நாகேந்திரன், சிங்காரவேலு, பாலமுருகன், சாமிதுரை, ராஜா, ஜான் ஆகியோர் போட்டிகளை நடத்தி வருகின்றனர். குறுமைய அளவிலான தடகளப் விளையாட்டு போட்டியில் முதல் மூன்று இடங்களை பிடிக்கும் மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்படுகிறது. மேலும், முதலிடம் பிடிப்போர் மாவட்ட அளவிலான போட்டிக்கு தகுதி பெறுவர். 

 

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us