தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/மினி சரக்கு வேன் கவிழ்ந்து விபத்து

மினி சரக்கு வேன் கவிழ்ந்து விபத்து

மினி சரக்கு வேன் கவிழ்ந்து விபத்து


ADDED : நவ 28, 2026 05:35 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 28, 2026 05:35 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

உளுந்துார்பேட்டை: உளுந்துார்பேட்டை அருகே மினி சரக்கு வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

நாமக்கல் மாவட்டம், வடிவேலன்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சக்திவேல் மகன் சரவணன், 29; வேன் டிரைவர். இவர், மினி சரக்கு வேனில் சமையல் எண்ணெயை ஏற்றிக்கொண்டு சேலத்தில் இருந்து சென்னை நோக்கி ஓட்டிச் சென்றார்.

இன்று (நவ.,28) காலை 8:45 மணியளவில் உளுந்துார்பேட்டை அடுத்த செம்பியன்மாதேவி அருகே தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது, ஏற்கனவே விபத்துக்குள்ளான கார் மீது மோதாமல் இருப்பதற்காக திருப்பியபோது கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் சரவணன் காயமின்றி தப்பினார்.

தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து விபத்துக்குள்ளான மினி சரக்கு வேனை அப்புறப்படுத்தினர்.

வாகனங்கள் மாற்று பாதையில் திருப்பி விட்டதால் போக்குவரத்து பாதிப்பு தவிர்க்கப்பட்டது.

எலவனாசூர்கோட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us