/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
மினி மாரத்தான் போட்டி : கலெக்டர் துவக்கி வைப்பு
/
மினி மாரத்தான் போட்டி : கலெக்டர் துவக்கி வைப்பு
ADDED : செப் 29, 2025 01:01 AM

கள்ளக்குறிச்சி,: கள்ளக்குறிச்சியில் நடந்த மினி மாரத்தான் போட்டியை கலெக்டர் துவக்கி வைத்தார்.
கள்ளக்குறிச்சியில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை மற்றும் விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் முன்னாள் முதல்வர் அண்ணாதுரை பிறந்த நாளை முன்னிட்டு நேற்று 17 வயது முதல் 25 வயதுக்குட்பட்டோர், 25 வயதுக்கு மேற்பட்டோர் என இரு பிரிவுகளின் கீழ் ஆண்கள், பெண்களுக்கு என தனி தனியாக மினி மாரத்தான் நடந்தது.
கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் துவங்கி, கச்சிராயபாளையம் சாலை வழியாக சென்று மீண்டும் கலெக்டர் அலுவலகத்தில் முடிந்தது.
போட்டியினை கலெக்டர் பிரசாந்த் துவக்கி வைத்தார். இதில் முதல் மூன்று இடங்களை பிடித்து வெற்றி பெற்றவர்களுக்கு முறையே ரூ.5 ஆயிரம், ரூ.3 ஆயிரம், ரூ.2 ஆயிரம், ஆறுதல் பரிசாக 4 முதல் 10 இடங்களை பிடிப்பவர்களுக்கு தலா ஆயிரம் ரூபாய் என மொத்தம் 28 பேருக்கு பரித் தொகை வழங்கப்பட்டது. மாவட்ட விளையாட்டு அலுவலர் சுரேஷ்குமார் மற்றும் மாணவ மாணவிகள் பங்கேற்றனர்.