/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
திருக்கோவிலுாரில் நிவாரண பணி அமைச்சர் துவக்கி வைப்பு
/
திருக்கோவிலுாரில் நிவாரண பணி அமைச்சர் துவக்கி வைப்பு
திருக்கோவிலுாரில் நிவாரண பணி அமைச்சர் துவக்கி வைப்பு
திருக்கோவிலுாரில் நிவாரண பணி அமைச்சர் துவக்கி வைப்பு
ADDED : டிச 06, 2024 06:34 AM

திருக்கோவிலுார் : திருக்கோவிலுார் கூட்டுறவு கடன் சங்க வளாகத்தில் புயல், கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, அரசின் 2,000 ரூபாய் மற்றும் நிவாரண உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
கலெக்டர் பிரசாந்த் முன்னிலை வகித்தார். அமைச்சர் பொன்முடி தலைமை தாங்கி, வெள்ளை பிள்ளையார் கோவில் தெரு, பொங்கமேட்டு தெரு உள்ளிட்ட வெள்ளம் சூழ்ந்த பகுதியைச் சேர்ந்த 200 ரேஷன் கார்டுதாரர்களுக்கு தலா 2,000 ரூபாய், 5 கிலோ அரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு கிலோ துவரம் பருப்பு உள்ளிட்ட நிவாரண தொகுப்பு பொருட்களை வழங்கி பேசுகையில், 'வெள்ள நிவாரண பணியினை விரைந்து செயல்படுத்த முதல்வர் ஸ்டாலின் ஆணையிட்டு இருக்கிறார்.
அதன் அடிப்படையில் இன்று திருக்கோவிலுார் பகுதியைச் சேர்ந்தவர்களுக்கு முதல் கட்டமாக 500 பேருக்கு உதவித்தொகை மற்றும் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.
கணக்கெடுப்பு பணிகள் துரிதமாக நடந்து கொண்டிருக்கிறது. கூரை வீடுகள் முழுதுமாக சேதம் அடைந்திருந்தால் புதிதாக வீடு கட்டி கொடுக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். பாதிக்கப்பட்டவர்கள் கவலையை மறந்து, மன உறுதியுடன் இருங்கள். உங்களுக்கு அரசு உறுதுணையாக இருக்கும்' என்றார்.
சார் ஆட்சியர் ஆனந்த்குமார், நகர மன்ற தலைவர் முருகன், கமிஷனர் திவ்யா, தாசில்தார் ராமகிருஷ்ணன் உள்ளிட்ட அனைத்து துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.