/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கொள்ளிடத்தில் ரூ.89.19 கோடியில் தடுப்பணை: அமைச்சர் துவக்கி வைப்பு
/
கொள்ளிடத்தில் ரூ.89.19 கோடியில் தடுப்பணை: அமைச்சர் துவக்கி வைப்பு
கொள்ளிடத்தில் ரூ.89.19 கோடியில் தடுப்பணை: அமைச்சர் துவக்கி வைப்பு
கொள்ளிடத்தில் ரூ.89.19 கோடியில் தடுப்பணை: அமைச்சர் துவக்கி வைப்பு
ADDED : ஏப் 28, 2025 05:56 AM

காட்டுமன்னார்கோவில் : சிதம்பரம் அடுத்த கொள்ளிடம் ஆற்றில் ரூ. 89.19 கோடியில் தடுப்பணை கட்டும் பணியை, அமைச்சர் பன்னீர்செல்வம் துவக்கி வைத்தார்.
கொள்ளிடம் ஆற்றில் கடலுார் மாவட்டம் ஒட்டரப்பாளையம் கிராமத்திற்கும், மயிலாடுதுறை மாவட்டம் லாலுாரன் படுகை கிராமத்திற்கும் இடையே தடுப்பணை கட்ட 89.19 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கடலுார் மாவட்டம் சிதம்பரம் அடுத்த கொள்ளிடம் ஆற்றில் தடுப்பணி கட்டுமான பணிக்கு பூமி பூஜை நேற்று நடந்தது.
கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தலைமை தாங்கினார். கடலுார் கண்காணிப்பு பொறியாளர் மரிய சூசை, சிதம்பரம் சப் கலெக்டர் கிஷன்குமார் முன்னிலை வகித்தனர். சிதம்பரம் செயற்பொறியாளர் காந்தரூபன் வரவேற்றார்.
அமைச்சர் பன்னீர்செல்வம் பங்கேற்று, தடுப்பணை கட்டும் பணியை துவக்கி வைத்தார்.
பின், அவர் பேசுகையில், கொள்ளிடத்தில் அமைக்கப்படும் தடுப்பணையால் நிலத்தடிநீர் உவர்ப்பாக மாறுவது தடுக்கப்படும்.
இதனால் 26 கிராமங்கள் பயன்பெறும். விவசாய நிலங்கள் மீண்டும் விவசாயம் செய்யும் வாய்ப்பை பெறும்.
இதேபோன்று கொள்ளிடம் ஆற்றின் கீழ் கரையில் மற்றொரு தடுப்பணை கட்ட வேண்டும். அப்பொழுது தான் கொள்ளிட கரையோர கிராமங்கள் அனைத்தும் பயன்பெறும். இதற்கான நடவடிக்கைகள் விரைவில் மேற்கொள்ளப்படும்' என்றார்.
விழாவில், உதவி செயற்பொறியாளர்கள் கொளஞ்சிநாதன், விஜயகுமார், கேசவராஜ், சிவராஜ், படைகாத்தான் உட்பட பலர் பங்கேற்றனர். உதவி பொறியாளர் ரமேஷ் நன்றி கூறினார்.

