/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கூட்டுறவு சர்க்கரை ஆலையில் அமைச்சர் ஆய்வு
/
கூட்டுறவு சர்க்கரை ஆலையில் அமைச்சர் ஆய்வு
ADDED : மே 09, 2025 01:07 AM

மூங்கில்துறைப்பட்டு: மூங்கில்துறைப்பட்டு கள்ளக்குறிச்சி கூட்டுறவு சர்க்கரை ஆலை மற்றும் நவீன கரும்பு சாகுபடி நிலங் களை அமைச்சர் ராஜேந்திரன் ஆய்வு செய்தார்.
மூங்கில்துறைப்பட்டு அருகே உள்ள சவேரியார் பாளையம், பிரதான சாலையில் உள்ள விளை நிலத்தில் சாகுபடி செய்துள்ள நவீன கரும்புகளை, சர்க்கரைத் துறை அமைச்சர் ராஜேந்திரன் நேரில் சென்று ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வில், சர்க்கரை துறை இயக்குநர் அன்பழகன், கலெக்டர் பிரசாந்த், எம்.எல்.ஏ.,க்கள் வசந்தம் கார்த்திகேயன், உதயசூரியன், மலையரசன் எம்.பி., மாவட்ட ஊராட்சி குழு தலைவர் புவனேஸ்வரி, ஆலை செயலாட்சியர் யோக விஷ்ணு ஆகியோர் உடன் இருந்தனர்.
தொடர்ந்து, மூங்கில்துறைப்பட்டு, கள்ளக்குறிச்சி கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு சென்று இயந்திரங்களை பார்வையிட்டார்.  மேலும் 10 ஆண்டுகளுக்கு முன்பு துவங்கப்பட்டு, இன்னமும் செயல்பாட்டிற்கு வராத  துணை மின் நிலையத்தை ஆய்வு செய்தார்.
இதையடுத்து, கூட்டுறவு சர்க்கரை ஆலை வளாகத்தில் நடந்த ஆய்வு கூட்டத்தில் பங்கேற்றார். இதில் சங்கராபுரம் வடக்கு ஒன்றிய திமுக  செயலாளர் அசோக் குமார் மற்றும் விவசாயிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மேலும்,  கச்சிராயபாளையம் அடுத்த அக்கராயபாளையத்தில் கூட்டுறவு சர்க்கரை ஆலையிலும் அமைச்சர் ஆய்வு மேற்கொண்டார்.

