/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
சிறுமி திருமணம்: வாலிபர் மீது வழக்கு
/
சிறுமி திருமணம்: வாலிபர் மீது வழக்கு
ADDED : டிச 23, 2024 05:14 AM
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி அருகே சிறுமியை திருமணம் செய்த நபர் மீது அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
கள்ளக்குறிச்சி பகுதியில் 18 வயதுக்குட்பட்ட பெண் குழந்தை திருமணங்கள் அதிகளவில் நடக்கிறது. இதை தடுக்கும் பொருட்டு சிறுமியை திருமணம் செய்த நபர்கள் மீது அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிந்து நடவடிக்கை மேற்கொள்கின்றனர்.
அதன்படி, சின்னசேலம் தாலுகா, பால்ராம்பட்டு கிராமத்தை சேர்ந்த சோலை மகன் சசிகுமார்,20; என்பவர் கடந்த ஜூன் மாதம் 12ம் தேதி, அருகிலுள்ள பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியை திருமணம் செய்துள்ளார்.
இது குறித்து கள்ளக்குறிச்சி மகளிர் ஊர்நல விரிவாக்க அலுவலர் செல்வி அளித்த புகாரின் பேரில், சசிகுமார் மீது கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.